சொந்த சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் தலைவர்களே இவர்கள்..! கூட்டணிக்கு தொடர் கண்டனம்

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Islam
By Farook Sihan Jul 14, 2026 02:10 PM GMT
Report

முஸ்லிம் சமூகத்தின் நில மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் நோக்கம் கொண்ட தமிழ் கட்சிகளுடன் இணைந்து, சொந்தச் சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை வன்மையாகக் கண்டிப்பதாக சமத்துவ மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் வைத்தியர் வை.எல்.எம். யூசுப் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று(14.07.2026) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் கடந்த திங்கட்கிழமை(13.07.2026) தமிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, பொதுவான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென புதிய கூட்டணி ஒன்றை அமைத்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தச் சவாலையும் கண்டனத்தையும் முன்வைத்துள்ளார்.

7 வயதில் உயிருக்கு போராடும் மகன்..! நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரியின் கடைசி ஆசை

7 வயதில் உயிருக்கு போராடும் மகன்..! நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரியின் கடைசி ஆசை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள தமிழ் பேசும் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகவே இந்த 6 கட்சிகளின் இணைவைப் பார்க்க முடிகிறது. மக்கள் மத்தியில் இன்று செல்லாக் காசுகளாக மாறியுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள், தங்களை மீண்டும் செல்லுபடியான காசுகளாக மாற்றிக் கொள்வதற்காகவே கொழும்பில் ஒன்றுகூடி இவ்வாறானதொரு பொதுத் தளத்தை அமைத்துள்ளனர்.

இவர்களால் நிச்சயமாக எமது மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இதுவரை காலமும் இனவாதமும் மதவாதமும் பேசி, தற்போது மக்கள் செல்வாக்கை இழந்து வருவதனாலேயே ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் மக்கள் எழுச்சி என்ற போர்வையில் புதிய வடிவத்தில் வந்துள்ளனர்.

சொந்த சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் தலைவர்களே இவர்கள்..! கூட்டணிக்கு தொடர் கண்டனம் | Criticism Of The Alliance Of Tamil Parties

பழைய சோற்றைச் சூடாக்கி, இப்போதுதான் சமைத்த சுடு சோறு என்று கூறி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இவர்களது பழைய கதைகள் எடுபடாத காரணத்தால், புதிய வடிவில் கட்டுக்கதைகளைக் கூறி ஏமாற்ற முனைகிறார்கள். இக்கூட்டணியின் உருவாக்கம் எமக்கு பாரிய சந்தேகத்தை எழுப்புகிறது.

பகிரங்க விவாதத்திற்குத் தயாரா? தலைவர்களுக்குச் சவால்

முஸ்லிம் சமூகத்தின் நில, நிர்வாக அதிகாரங்களைப் பறிக்கும் தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை வன்மையாகக் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன், தமிழ் - முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

இதேவேளை, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எந்த நேரத்திலும் பகிரங்க விவாதத்திற்கு வரத் தயாராக இருந்தால், அவர்களுக்கு பிரச்சினைகள் குறித்து முழு விளக்கமளிக்கவும் தான் தயாராக இருக்கின்றேன் என்றார்.   

பாதாள உலகக் குழுக்களுக்கு பணம் வழங்கினாரா சஜித்..! குற்றச்சாட்டை மறுக்கும் முஜிபுர் ரஹ்மான்

பாதாள உலகக் குழுக்களுக்கு பணம் வழங்கினாரா சஜித்..! குற்றச்சாட்டை மறுக்கும் முஜிபுர் ரஹ்மான்

கபில சந்திரசேன வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கபில சந்திரசேன வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US