வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருவோருக்கு சிக்கல்! இலக்கு வைக்கும் மர்மக் கும்பல்
காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(14.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க யூரோ மற்றும் இலங்கை மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்தனர்.
விசாரணைகளுககு அமைய காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri