அனுராதபுரத்தில் கோர விபத்தில் இருவர் பலி - கர்ப்பிணிப் பெண் படுகாயம்
அனுராதபுரம், மிஹிந்துபுர பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிசு செரிய பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இருவர் பலி
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் பொலநறுவையில் இருந்து நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, மற்றொரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri