13இற்கு பேராதரவு: சமஷ்டிக்கு எதிர்ப்பு! ஐக்கிய மக்கள் சக்தி விளக்கம்
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு முழுமையான ஆதரவை நாம் தெரிவித்ததாலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியிலும் சமஷ்டி தீர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உபதலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கை அரசமைப்பின் ஓர் அங்கம். அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்குகின்றது.
13ஆவது திருத்தச் சட்டம்
அதேபோல் 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் சர்ச்சை நிலை காணப்படுகின்றது.
அனைவரும் பேசி இவ்விரு அதிகாரங்கள் தொடர்பில் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாடு இல்லையேல் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது.
13இல் உள்ள ஏனைய விடயங்கள் வழங்கப்படும். அத்துடன், சமஷ்டி தீர்வை நாம் ஆதரிக்கவே மாட்டோம் என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
