இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்

Sri Lanka Tamil Nadu Police India Crime Whitening Cream
By Ashik May 02, 2026 07:08 AM GMT
Report

தமிழ் நாடு - புதுமடம் கடற்கரையிலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய பெறுமதி 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது

இவ்வாறு பதுக்கி வைக்கப்படடிருந்த பொருட்கள் எஸ்.பி தனிப்பிரிவு பொலிஸாரால் நேற்று முன்தினம் (30.04.2026) மீட்கப்பட்டுள்ளது.

வங்கி அமைப்பு மூலம் வழங்கப்படும் கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

வங்கி அமைப்பு மூலம் வழங்கப்படும் கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

கடத்தபட்ட பொருட்கள்  

பூச்சி மருந்து, ஷாம்பு, காபி தூள், ஃபேஸ் க்ரீம், சோப்பு, உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்ருந்தது.

குறித்த பொருட்களை மீட்ட எஸ்.பி தனிப்பிரிவு பொலிஸார் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல் | 13 Lakh Indian Rupees Recovered By The Police

மேலும், ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் கடல் வழியாக படகில் கடத்தல் பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தமையினால் ஆங்காங்கே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் படையினர் வாகன சோதனையில் மேற்கொண்டு வந்ததால் கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தது.

அதன் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கட்டதால் மீண்டும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல் | 13 Lakh Indian Rupees Recovered By The Police

இதனை தொடர்ந்து, உச்சப்புளி அடுத்த புதுமடம் கடற்கரையிலிருந்து படகில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மானாங்குடி சாலையில் உள்ள வீடு ஒன்றில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமேஸ்வரம் உட்கோட்ட எஸ்.பி தனிப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆளில்லாத அந்த வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் தலைமறைவு

அவ்வாறு, வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு 28 மூட்டைகளில் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த மூட்டைகளை திறந்து பார்த்த போது 19 மூட்டைகளில் பூச்சி கொல்லி மருந்து, இரண்டு மூட்டைகளில் சோப்பு, ஐந்து மூட்டைகளில் ஃபேஸ் க்ரீம், ஒரு மூட்டையில் ஷாம்பு, ஒரு மூட்டையில் காபித்தூள் என மொத்தமாக 13 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தமை தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல் | 13 Lakh Indian Rupees Recovered By The Police

குறித்த பொருட்களை பறிமுதல் செய்த தனி பிரிவு போலீசார் மேலதிக விசாரணைக்காக அவற்றை கீழக்கரை சுங்கதுறை கண்காணிப்பாளர் வெங்கடேஷிடம் ஒப்படைக்கப்பட்டு பின் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், கடத்தல் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தீக்கிரையான ராகலை புரூக்சைட் தேயிலை தொழிற்சாலை

தீக்கிரையான ராகலை புரூக்சைட் தேயிலை தொழிற்சாலை

வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US