தீக்கிரையான ராகலை புரூக்சைட் தேயிலை தொழிற்சாலை
நுவரெலியா - ராகலை, புரூக்சைட் பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று (01) அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீப்பரவல் காரணமாக தொழிற்சாலைக்கும் அதன் உடமைகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்
குறிப்பாக பழமையான தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

ராகலை பொலிஸார் தோட்ட மக்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை அணைக்க முற்பட்டபோதிலும், தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேதம் தொடர்பான மதிப்பாய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பவத்தின் போது தொழிற்சாலையில் 6 தொழிலாளர்கள் இருந்ததாகவும் குறித்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ராகலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan