யாழ். சிறுமி கொலை வழக்கில் பாட்டியின் திடுக்கிடும் வாக்குமூலம்(Video)

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Sri Lanka Police Investigation
By Theepan Sep 15, 2023 03:22 AM GMT
Report

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன் எனவும் கொலை செய்த பின்னர் நானும் உயிரை மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் எனவும் பாட்டியார் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 வயது சிறுமி சடலமாகவும் , பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.


தாய்க்கு அழைப்பெடுத்த கிளிநொச்சியில் காணாமல்போன மாணவி: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

தாய்க்கு அழைப்பெடுத்த கிளிநொச்சியில் காணாமல்போன மாணவி: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

பொலிஸ் விசாரணை

சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின் உடல்நலம் தேறிய நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் விசாரணைகளின் போது, தனது பெயர் நாகபூசணி (வயது 55) எனவும் தான் ஒரு மருத்துவ தாதியாக கடமையாற்றியவர் எனவும் கூறியுள்ளார்.

யாழ். சிறுமி கொலை வழக்கில் பாட்டியின் திடுக்கிடும் வாக்குமூலம்(Video) | 12 Years Old Gril Detha In Jaffna Update

அத்துடன் தனது பேத்தியின் பெயர் பார்த்திமா ஹீமா (வயது 12) என தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணைகளில்,

" நான் மருத்துவ தாதியாக பணியாற்றியுள்ளேன். எனது மகள் முஸ்லீம் இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு பெண் பிள்ளை பிறந்த நிலையில், அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

யாழ். விடுதியில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்: வெளியான திடுக்கிட வைக்கும் காரணம்

யாழ். விடுதியில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்: வெளியான திடுக்கிட வைக்கும் காரணம்

அதன் போது அவர்களது பிள்ளை என்னுடன் வளர்ந்து வந்தது. சில காலத்தில் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்துகொண்டனர்.

பேத்தி என்னுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில் , பேத்தியின் தகப்பன் , தன்னுடன் , தனது பிள்ளையை அனுப்புங்கள் , நான் வளர்க்கிறேன் என கூறி எனது பேத்தியை அழைத்து சென்று விட்டார். பேத்தி என்னை விட்டு பிரிந்ததும் , அவளின் பிரிவு துயரும் , அவளின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது.

அதனால் நான் சில மாதங்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்தேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருகோணமலைக்கு சென்று , எனது பேத்தியின் தந்தையிடம், பேத்தி சில நாட்கள் என்னுடன் இருக்கட்டும், வீட்டுக்கு அழைத்து சென்று சில நாட்களில் மீண்டும் அழைத்து வந்து விடுகிறேன் என கூறி பேத்தியை அழைத்துக்கொண்டு, யாழ்ப்பாணம் வந்தேன்.

விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! இறுதியில் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்

விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! இறுதியில் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்

பாட்டிக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பேத்திக்கு மருத்துவம் செய்ய வந்துள்ளோம் என கூறி அந்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தங்குமிடத்தில் அறையை வாடகைக்கு பெற்று, தங்கி இருந்தோம்.

அப்போது, பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்தியை கொலை செய்து விட்டு. நானும் உயிரை மாய்த்துக்கொள்ள என முடிவெடுத்தேன்.

யாழ். சிறுமி கொலை வழக்கில் பாட்டியின் திடுக்கிடும் வாக்குமூலம்(Video) | 12 Years Old Gril Detha In Jaffna Update

அறையில் பேத்தியை விட்டு, அருகில் உள்ள மருந்தகத்திற்கு சென்று தூக்க மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகளையும் ஊசியையும் , (சிறிஞ்) வாங்கினேன். என்னிடம் மருத்துவ தாதி என்பதற்கான அடையாள அட்டை இருந்தமையால், அதனை காட்டி மருந்துகளை வாங்கினேன்.

அறைக்கு வந்து பேத்திக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து , அவள் தூங்கிய பின்னர் மருந்துகளை கலந்து ஊசி மூலம் அவளின் உடலில் செலுத்தினேன். பின்னர் நானும் அதனை எனக்கும் செலுத்திக்கொண்டேன்.

ஊசி ஏற்றியதில் அவள் இறந்து விட்டாள், நான் காப்பாற்றப்பட்டு விட்டேன்" என தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO)

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் பெரும் சர்ச்சையாகும் விசேட அதிரடிப்படையினரின் செயல் (VIDEO)

அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த சிறுமியின் பாட்டியை இன்றைய தினம் வியாழக்கிழமை பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு , மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, " எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. எங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம்" என சிறுமியின் பாட்டி பொலிஸாருக்கு எழுதிய கடிதமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி அடுத்த தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பு

கொழும்பில் இருந்து கல்முனை சென்ற பயணிக்கு ஏற்பட்ட அசௌகரியம்(Photos)

கொழும்பில் இருந்து கல்முனை சென்ற பயணிக்கு ஏற்பட்ட அசௌகரியம்(Photos)

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US