விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! இறுதியில் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தின் கூரையில் பயணித்த நிலையில், கீழே விழுந்து உயிரிழந்த இளைஞரின் கண்களை நீண்ட பேராட்டத்தின் பின்னர் பெற்றோர் தானம் செய்துள்ளார்.
தொடருந்து சாரதிகள் தொழிற்சங்கம் நேற்று முன்தினம் (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கடும் சனநெரிசலுக்கு மத்தியில் தொடருந்தின் கூரையில் குறித்த இளைஞன் பயணித்த நிலையில் பாலத்தில் மோதுண்டு கீழே விழுந்து உயிரிழந்திருந்தார்.
இந்த விபத்தில் இரத்மலானை தேசிய பயிலுனர் கல்லுாரியில் கல்வி பயின்ற கம்பஹா மொரகொட பிரதேசத்தை சேர்ந்த டொன் டினித் இந்துவர என்ற 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்திருந்தார்.

விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்
தொடருந்து நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு
இதனை தொடர்ந்து இராகமை போதனா வைத்தியசாலை முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாக இராகமை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ்.ஐ.எஸ். திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியர்களின் ஆலோசனையுடன் அவரது கண்களை தானம் செய்ய பெற்றோர் முன்வந்துள்ளனர்.
இதேவேளை, விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபாய் வழங்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும், வேலை நிறுத்தம் காரணமாக நேற்று (12) முதல் தொடருந்து நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
