சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிப்பு!
இலங்கையில் நிலவும் கனமழை, பலத்த காற்றுடனான சீரற்ற காலநிலை காரணமாக 12 ஆயிரத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கணக்கெடுப்பின்படி பலத்த மழை, காற்று முதலான இயற்கை அனர்த்தங்களினால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு
இதுவரை 3 ஆயிரத்து 36 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 480 வீடுகள் சேதமாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இயற்கைப் பேரிடர்கள் நிலவி வரும் இந்த நாட்களில் அவசர தேவைக்காகத் தொடர்பு கொள்வதற்கு 117 என்ற இலக்கத்துக்கு அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam