பெக்கோ சமனின் கைபேசியில் நாமல் சேர்..
திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர் பெக்கோ சமன் போன்றவர்களின் கைபேசிகளில், "நாமல் சேர்" மற்றும் "எனது சேர் ராஜபக்ச" ஆகிய பெயர்களின் தொலைபேசி இலக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், "அது இந்த நாமலா அல்லது வேறொரு நாமலா, இந்த ராஜபக்சவா அல்லது வேறொருவரா என்று தெரியவில்லை என்று மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களுடன் தொடர்புடைய தகவல்கள் குறித்தும் பல விடயங்களை முன்வைத்துள்ளார்.
நிமல் லான்சா போதைப்பொருளுடன் கைதானபோது
கொலைகாரர்கள், குற்றக் குழுவினர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது எந்தவொரு நாகரிக நாட்டிலும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அத்தகைய கோரிக்கைகளை தற்போதைய அரசாங்கம் நிராகரிப்பதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு குற்றவாளியையும் பாதுகாக்காது என்றும், அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நீர்கொழும்பில் நிமல் லான்சா போதைப்பொருளுடன் கைதானபோது, உலங்குவானூர்தியில் சென்று அவரைத் தழுவிக்கொண்டதாகக் கூறி, கடந்த கால அரசியல் தொடர்புகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை போதைப்பொருள் அற்ற நாடாக மாற்றுவதற்கான பொறுப்பு தன் தோள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கடமையில் முழு நாட்டு மக்களும், மதத் தலைவர்களும், கல்வியாளர்களும் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜனனி, சக்திக்கு எதிராக குணசேகரன் போடும் திட்டம், கதிர் செய்யப்போவது என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
