அரச நிறுவனம் ஒன்றின் 8 அதிகாரிகளுக்கு 11 கோடி ரூபாய் சம்பளம்
நாட்டில் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அரச நிறுவனம் ஒன்றின் தலைவர் உட்பட பிரதான அதிகாரிகள் எட்டு பேருக்கு வருடாந்தம் மாதச் சம்பளம் மற்றும் கொடுப்பனவாக 11 கோடி ரூபாவுக்கும் வழங்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இந்த நிறுவனம் தற்போது விநியோகித்து வரும் நுகர்வு பொருள் ஒன்றினால் ஏற்பட்டு வரும் அதிகளவான நஷ்டம் காரணமாக, அதன் விலையை அதிகரிக்குமாறு இந்த நிறுவனம் அண்மையில் கடுமையாக அழுத்தங்களை கொடுத்து வந்தது.
இந்த நிறுவனத்தின் தலைவருக்கு மாதச் சம்பளம் மற்றும் கொடுப்பனவாக சுமார் 13 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் மேலும் எட்டு அதிகாரிகளுக்கு மாதச் சம்பளம் மற்றும் கொடுப்பனவாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனத்தை அரசாங்கத்தின் கணக்காய்வில் இருந்து விடுவிக்க, நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்வதற்காகவும் சட்டம் நிறுவனம் ஒன்றுக்கு 10 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
