குளவி கொட்டுக்கு இலக்கான 10 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
நோர்வூட் - அயரபிதோட்ட பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 10 பேர் தோட்டத் தொழிலாளர்கள் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(11.08.2026) 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அயரபிதோட்ட பகுதியில் வழமை போன்று தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடு கலைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த குளவிகள் திடீரென தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குளவிகள் கூட்டமாக தொழிலாளர்களைத் தாக்கியதில் குளவி கொட்டுக்கு உள்ளனா 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதகவும், மூன்று பேர் மாத்திரம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
குளவி தாக்குதல் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டதுடன், குளவிக்கூடு அமைந்திருந்த பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மலையகத்தின் பல்வேறு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் குளவி மற்றும் தேனீக்களின் தாக்குதல்கள் அவ்வப்போது பதிவாகி வருகின்ற நிலையில், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு News Lankasri