போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையா..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (11.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான முன்மொழிவு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
பிரச்சினையின் தீவிரத்தன்மை
இது தொடர்பாக சில தரப்பினரால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து விவாதிக்கும்போது, சில தரப்பினரிடமிருந்து முன்மொழிவு, யோசனை வந்துள்ளது.

எனினும் அதை எப்படிச் செய்வது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவோ அல்லது உடன்பாடோ எட்டப்படவில்லை.
பாதாள உலகம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இது போன்றவற்றுடன் நடைபெறும் செயல்முறை குறித்து விவாதிக்கும்போது ஒவ்வொரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு மட்டுமே இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்