உலகின் 10 சக்திமிக்க நாடுகள் அறிவிப்பு: இந்தியாவுக்கு இடமில்லை
உலகின் முதல் 10 தரவரிசையிலான நாடுகள் ஃபோர்ப்ஸ் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளமுடன் இஸ்ரேல் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
சக்திவாய்ந்த நாடுகள்
எனினும் இந்தியா இந்த 10 நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படாமை குறித்து, பல்வேறு கேள்விகள் எழுப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பட்டியல் பல முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்றபோதும், அதிக மக்கள் தொகை, நான்காவது பெரிய இராணுவம் மற்றும் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட இந்தியாவை ஏன் இந்த பட்டியில் சேர்க்கவில்லை என்ற கேள்வியே எழுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த பட்டியல், ஐந்து முக்கிய காரணிகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று ஃபோர்ப்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியா
தலைமைத்துவம், பொருளாதார செல்வாக்கு, அரசியல் செல்வாக்கு, வலுவான சர்வதேச கூட்டணிகள் மற்றும் ஒவ்வொரு நாட்டின் இராணுவ வலிமை என்பனவே அவையாகும் என்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த பட்டியலில்,உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டியலின்படி, முதல் 10 இடங்களில், அமெரிக்கா, சீனா, ரஸ்யா ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி, தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |