அத்துமீறிய மீன்பிடி : இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேருக்கு விளக்கமறியல்
புதிய இணைப்பு
இலங்கை கடற்பரப்பான நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் 10 கடற்றொழிலாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்றைய தினம்(12) கைதான கடற்றொழிலாளர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - தீபன்
முதலாம் இணைப்பு
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி இழுவைமடி தொழிலில் ஈடுபட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்று(13.01.2026) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
IND TN 10 MM 513 என்னும் படகில் அத்துமீறி நுழைந்த பத்து இந்திய கடற்றொழிலாளர்களே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள்
இதன்படி, 40/26 த/பெ ஜோசப், பிரான்சிஸ் நகர், பாம்பன் பகுதியை சேர்ந்த ஜார்ஜ்டோக்கி என்பவரும், 42/26 S/o யோசையா அருளப்பு, மண்டபம் அகதி முகாமையை சேர்ந்த சுதன் என்பவரும், 25/26 S/o மணி , கீழத்தெரு, திண்டுக்கரை, அந்தநல்லூர், திருச்சிராப்பள்ளியை சேர்ந்த கனகராஜ் என்பவரும் 38/26 S/O சுப்பிரமணி , பனைக்குளம் ராமநாதபுரத்தை சேர்ந்த சுமித் என்பவரும், 35/26 S/o மிசியாஸ் அய்யந்தோப்பு, தங்கச்சிமடத்தை சேர்ந்த பரலோகராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 27/25 S/o காளிமுத்து, அம்பேத்கர் நகர், ராமேஸ்வரத்தை சேர்ந்த கோபி என்பவரும், 42/26 S/o ஜேசுராஜா, பிரான்சிஸ் நகர், பாம்பன் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ரூபட் என்பவரும், 35/26 S/o ராமமூர்த்தி, தெற்கு கரையூர், இராமேஸ்வரத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவரும், 35/25 S/O செல்வராஜ், புதுமடம், உச்சிப்புளியைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் ராஜேஸ் என்பவருடன் சேர்த்து மொத்தமாக 10 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மீனவ சங்க பிரதிநிதி கண்டனம்
இதேவேளை, இன்று முன்னெடுக்கப்பட்ட அதிரடி கைது நடவடிக்கை குறித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதி சகாயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவர், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுப்பட்டதாக ராமேஸ்வரத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற ஒரு விசைப்படகையும் அதில் இருந்த பத்து கடற்றொழிலாளர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து காரைநகர் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு பின்னர் கடற்றொழிலுக்கு சென்ற ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்த நிகழ்வு மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த புயல் காரணமாக கடந்த ஒரு வாரமாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, நேற்று(12) காலை ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று 400க்கும் மேற்பட்ட விசைப்பல்களில் 2000-க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நீதிமன்ற நடவடிக்கை
கடற்றொழிலாளர்கள், நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் தென்னரசு என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகையும், அதில் இருந்த பரலோகராஜ், சுமித், கனகராஜ், சுதன், டோக்கியோ உட்பட பத்து கடற்றொழிலாளர்களை கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்களிடம் முதற்கட்ட விசாரணையை முடித்து பின்னர், கடற்றொழிலாளர்களை படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கை மற்றும் டிட்வா புயல் காரணமாக கடந்த மாதம் மிகவும் குறைந்த நாட்கள் மட்டுமே ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு கடலுக்கு சென்று நிலையில், மீண்டும் இலங்கைக்கு அருகே உருவாகிய புயல் காரணமாக கடந்த ஒரு வாரம் கடற்றொழிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது.
இதனைத் தொடர்ந்து, வயிற்று பிழைப்புக்காக நேற்று கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், கடற்றொழிலாளர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்ற சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri