கிரீன்லாந்து மக்கள் ரஸ்யாவுடன் இணையும் வாய்ப்பு : ட்ரம்ப் விரைந்து செயற்படுவாரா?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆர்க்டிக் தீவைப் பாதுகாக்க விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கிரீன்லாந்து மக்கள் ரஸ்யாவுடன் சேர வாக்களிக்கலாம் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார்.
சில நாட்களில் திடீர் வாக்கெடுப்பு நடத்தப்படலாம், அதில் 55,000 பேர் கொண்ட கிரீன்லாந்து முழுவதும் ரஸ்யாவுடன் சேர வாக்களிக்கலாம் என்று மெட்வெடேவை மேற்கோள் காட்டி இன்டர்ஃபெக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கீரின்லாந்தில் எழும் மறுப்பு
டென்மார்க் பிரதேசமான கிரீன்லாந்தை, அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியை டிரம்ப் மீண்டும் தொடங்கியுள்ளார்.

ரஸ்யா இந்த தீவை சொந்தமாக்குவதை தடுக்க வோசிங்டன், அதனை சொந்தமாக்க வேண்டும் என்று வாதிடுகிறார். அதன் இருப்பிடமும் வளங்களும் அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாததாக இருக்கிறது அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனினும், இது டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திலிருந்து உறுதியான கடும் மாற்றுக் கருத்துக்களை எழுப்பியுள்ளது.
கிரீன்லாந்திற்கு ரஸ்யா எந்த உரிமையும் கோரவில்லை என்றாலும், வடக்கு அட்லாண்டிக் பாதைகளில் அதன் நிலைப்பாடு மற்றும் அங்கு ஒரு பெரிய அமெரிக்க இராணுவ மற்றும் விண்வெளி கண்காணிப்பு வசதி இருப்பதால், ஆர்க்டிக் பாதுகாப்பை அந்த நாடு நீண்ட காலமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
You may like this video
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri