நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவிடுவேன் - எழுந்துள்ள புதிய சர்ச்சை
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகு கைது
அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய பிடியாணையயை மதித்து, விமான நிலையத்தில் நெதன்யாகுவை பிடித்தவுடன் கைது செய்வேன் என்று மம்தானி விளக்கியுள்ளார்.
நவம்பர் 4 ஆம் திகதி நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனால், நியூயோர்க், யூதர்கள் அதிகமாக வாழும் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.
எனவே, மம்தானி தனது திட்டத்தை நிறைவேற்றினால், அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முன்னதாக, அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை உள்ளது.
ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




