ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டொலர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஜெலென்ஸ்கி ஒரு பில்லியனர் என சமூக வலைத்தளங்களிலும் ரஷ்யா வெளியிட்ட தகவல்களிலும் கூறப்பட்டு வந்தது.
ஆனால், இது உண்மையல்ல என்று தற்போது கூறப்படுகிறது.
வெற்றி பெற்ற தொலைக்காட்சித் தொடர்
ஜெலென்ஸ்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் நடிகராகவும் நகைச்சுவை கலைஞராகவும் தயாரிப்பாளராகவும் பெரும் வருமானம் ஈட்டியுள்ளார்.
1997ஆம் ஆண்டு அவர் நிறுவிய Kvartal 95 என்ற நகைச்சுவை குழு, பின்னாளில் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக மாறியது.
அத்துடன், அவரது "Servant of the People" (2015-2019) என்ற தொலைக்காட்சித் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் ஒரு சாதாரண ஆசிரியர் உக்ரைனின் ஜனாதிபதியாகும் கதாபாத்திரைத்தை ஜெலென்ஸ்கி ஏற்று நடித்திருந்தார்.
பொருளாதார வீழ்ச்சி
இந்த தொடர் அவருக்கு புகழை சேர்த்ததோடு பெரும் வருமானத்தையும் ஈட்டித் தந்தது.
அவருக்கு சொந்தமாக உக்ரைனில் 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.
கீவ் நகரத்தில் சில கூட்டுறவு சொத்துகள் மற்றும் ஒரு சிறிய வணிக கட்டிடமும் அவருக்கு சொந்தமானதாக உள்ளது.
எவ்வாறாயினும், போரின் காரணமாக உக்ரைனில் தொழில் மற்றும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அவரது வருமானம் மேலும் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
