ட்ரம்ப் - ஜெலென்ஸ்கியின் இரகசிய வீடியோவில் அதிர்ச்சி தகவல்கள் பல
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வோளோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற உரையாடல் உண்மையில் நடந்ததா அல்லது ஒரு நாடகமா என்பது குறித்து தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
உக்ரைனிய ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் சந்தித்த போது, ட்ரம்ப் கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தார்.
இதிலிருந்து உக்ரைனிய ஜனாதிபதி மீது ட்ரம்ப் கொண்டுள்ள அதிருப்தி உலகத்திற்கு வெளிப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, ட்ரம்ப் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளப் போகிறார் என்றால் ஏன் அந்த இடத்திற்கு ஊடகங்களை அழைக்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் கேள்வி எழுப்புகின்றார்.
இதனால், ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு குறித்து வெளியான காணொளியின் உண்மைத்தன்மை குறித்து அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
