ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க அரசு தீர்மானம்
அமெரிக்காவின் (United States) சமூக பாதுகாப்பு நிறுவனம், அதன் பணியாளர்களை குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் 7,000 பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 மில்லியன் வயோதிப அமெரிக்கர்களுக்குச் சலுகைகளை வழங்கும் இந்த நிறுவனத்தில் பணியாளர்களின் அளவை குறைப்பதற்கான நடவடிக்கை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினது (Donald Trump) தீர்மானமாகும்.
பணியாளர்கள் குறைப்பு
இந்தநிலையில், ஒவ்வொரு மாதமும் 73 மில்லியன் ஓய்வுபெற்ற மற்றும் விசேட தேவையுடைய அமெரிக்கர்களுக்குக் காசோலைகளை அனுப்பும் சமூக பாதுகாப்பு நிறுவனம் அதன் பணியாளர்களை 12 சதவீதத்திற்கும் அதிகமானோரைக் குறைக்கப் போவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், தமது பிராந்திய அலுவலகங்களை மூடவுள்ளதாகவும் அமெரிக்க சமூக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri