கனடாவில் நடைபெற்ற தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் அமோக வெற்றி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில் ஈழத்தமிழர் இருவர் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
ஒண்டாரியா மாகாண சபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் டக் ஃபோர்ட் தலைமையிலான புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கமைய புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சி 81 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. என்.டி.பி. (NDP) 26 இடங்களைப் பெற்றுள்ளனர். இதன்மூலம் மீண்டும் எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளனர்.
தேர்தல் வெற்றி
லிபரல் கட்சி 14 இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், கட்சித் தலைவர் பானி க்ராம்பி (Bonnie Crombie) தனது தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில் வெற்றிக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்த டக் ஃபோர்டு, “ஒன்டாரியோவை பாதுகாக்க ஒரு வலுவான, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது பெரும்பான்மை ஆட்சியை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை
இதேவேளை இந்தத் தேர்தல் புரோகிரஸிவ் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோர் மீண்டும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் மூன்றாவது தடவையாகவும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகி உள்ளமை விசேட அம்சமாகும்.