உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவம் தொடர்பில் அமெரிக்கா அதிரடி முடிவு!
உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து இராணுவ உதவிகளை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(Donald Trump) நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இருந்த போது போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், இராணுவ உதவிகளை செய்து வந்தது.
இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைன்(Ukraine ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினார்.
போர் நிறுத்த ஒப்பந்தம்
ரஸ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன் ரஸ்ய- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரமாக உள்ளார்.
இந்த நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தை இடம் பெற்ற போது உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது உலக நாடுகளிடையே பேசுபொருளாகியிருந்தது.
இதேவேளை, உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை அமெரிக்கா எடுத்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு சென்றார்.
கடும் வாக்குவாதம்
அப்போது வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் ட்ரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள காணொளி வெளியாகியிருந்தது.
இதையடுத்து இந்த சந்திப்பு பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டதுடன் மேலும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டதால் வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார்.
ட்ரம்புடனான மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன ஆனால் ரஸ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு மிகவும் முக்கியம் என்றே கருதப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் பாதிப்பு
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, போரில் உக்ரைனுக்கு அனுப்பப்பட காத்திருக்கும் பில்லியன் கணக்கான டொலர் மதிப்பு உள்ள ரேடார்கள், வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உதவிகள் விநியோகத்தை நிறுத்தும் முடிவு தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே உக்ரைனுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தும் பட்சத்தில் அது போரில் உக்ரைனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.
இதற்கிடையே ட்ரம்ப்-ஜெலன்ஸ்கி மோதல் விவகாரத்தில் நேட்டோ அமைப்பு சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்து உள்ளது.
ட்ரம்புடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று ஜெலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

மன்னர் காலத்து இரும்பு உள்ளாடை: ராணிகளின் ரகசியம் உண்மையா? வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி! News Lankasri

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
