கொழும்பில் முக்கிய சந்திப்பில் அரசியல்வாதிகள்! ஜே.வி.பி தொடர்பில் கசிந்த தகவல்
அரசியல் தலைவர்களுக்கும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று சமீபத்தில் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய, முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, திஸ்ஸ அத்தநாயக்க, வஜிர அபேவர்தன, கயந்த கருணாதிலகே மற்றும் அரசியல்வாதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கிடையே கலந்துரையாடல்
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் சுனில் ஜெயந்த நவரத்ன ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் தயாரான திரைப்படத்தினை பார்வையிட பந்துல குணவர்தனவின் அழைப்பின் பேரில் வந்துள்ளனர்.

இதன்போது திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு, அரசியல்வாதிகளுக்கு இடையே ஒரு சுருக்கமான உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் விவாதித்ததாக கூறியுள்ளார்.
ஓய்வூதியத்தை இழக்கும் ஜே.வி.பி பிரதிநிதிகள்
மேலும், ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் கிட்டத்தட்ட நாற்பது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதியத்தை இழப்பார்கள் என்ற தகவல் வெளியானதாக கரு ஜெயசூரிய கூறியுள்ளார்.
ஓய்வூதியத்தை ஒழிப்பது பல்வேறு காரணங்களால் உதவியற்றவர்களாகவும், நோய்வாய்ப்பட்டும் இருக்கும் கணிசமான எண்ணிக்கையிலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதிக்கும் என்பதால், ஓய்வூதிய திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam