பிரித்தானிய பிரதமரையும் சந்தித்த ஜெலென்ஸ்கி! சூடுபிடிக்கும் போர்க்களம்
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம்(01.03.2025) லண்டனில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்துள்ளது.
இதன்போது, போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கிய ஆதரவுக்கு ஜெலென்ஸ்கி ஸ்டார்மருக்கு நன்றி தெரிவித்தார்.
கடன்
அத்துடன், நாளை சார்லஸ் மன்னரை சந்திக்க உள்ளதாகவும் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.
🇺🇦🇬🇧🚨 BREAKING: Ukrainian President Zelenskyy meets with UK Prime Minister Keir Starmer at Downing Street, after being booted out of the White House. pic.twitter.com/JrbTG9eytX
— Florissant (@FlorissantPosts) March 1, 2025
இதேவேளை, உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்க்காக பிரித்தானியா உக்ரைனுக்கு 2.26 பில்லியன் பவுண்டுகளை கடனாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக உக்ரைனிய நிதி அமைச்சர் செர்ஹி மார்சென்கோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்றையதினம் நேரில் சந்தித்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
