காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவிலிருந்து இளைஞர்கள் நடைபயணம்
மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு மக்களால் பெரும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதன் காரணமாக அதற்கு பலம் சேர்க்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் நேற்றையதினம்(10) முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து கால்நடையாக மன்னார் நோக்கி நடந்து செல்கின்றனர்.
அத்தோடு, துண்டு பிரசுரங்களையும் வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
காற்றாலை
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், காற்றாலை அபிவிருத்தி திட்டம் மக்களுக்கானதா, முதலாளிகளுக்கானதா, எமது வளத்தை அழித்துவிட்டு யாருக்கானது உங்கள் அபிவிருத்தி.
எமது நிலங்களும், எமது வளங்களும் எமக்கானதே. முதலாளிகளின் அடிவருடிகளாக இல்லாது எம் எதிர்காலத்தையும் சிந்திப்போம்.
கனியமணல் சுரங்கம் மன்னார் தீவிற்கு மட்டுமல்ல முழுநாட்டிற்கும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
