லேடி ரிட்ஜ்வே மருத்துவரிடம் கப்பம் கோரிய இளைஞனுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில்(LRH) பணியாற்றும் மருத்துவர் ஒருவரிடம் கப்பம் கோரிய இளைஞன் ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவரின் மொபைல் போன் மெமரிகார்ட் ஐ திருடி அதில் இருந்த நிர்வாணப் புகைப்படங்களை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி , அவரிடம் இருந்து குறித்த இளைஞன் ஐந்து லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
சம்பவம் தொடர்பில் மருத்துவர் பொலி்ஸாரிடம் முறைப்பாடு மேற்கொண்டதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மருத்துவரின் உதவியாளர் ஒருவரும் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் கப்பம் கோரி அச்சுறுத்திய இளைஞன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
அதன் போது ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்த ஒரு வருட சிறைத்தண்டனை மற்றும் மூவாயிரம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |