உலக சாதனை புத்தகத்தில் பதிவான இலங்கை பெண்கள்
நாடுபூராகவும் தெரிவு செய்யப்பட்ட உடை அலங்கார வடிவமைப்பாளர்கள் (Fashion Designers) உலக வரலாற்று புத்தகத்தில் தங்கள் திறமையினை வெளிப்படுத்தி சாதனை படைத்தமைக்காக இந்தியாவினை தளமாக கொண்ட கலாம் உலக சாதனை புத்தகம் ஊடாக சாதனை படைத்துள்ளார்கள்.
சான்றிதழ்கள்
இவ்வாறு சாதனை படைத்த 46 வரையான நாட்டின் பல்வேறு மாவட்டத்தினை சேர்ந்த பெண்களுக்கு உலக சாதனை பதிவு செய்தமைக்கான சான்றிதழ் மற்றும் நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு, நேற்று (21) முள்ளியவளை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனும் நைட்டா தொழில்பயிற்சி நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் எஸ்.சிவகௌரியும் கிராம சேவையாளர் சி.வஜிதா சமாதான நீதவான் க.தியாராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |