மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத மென்பான போத்தல்கள் அழிப்பு
மனித பாவனைக்கு உதவாத செயற்கையான பொருட்கள் சேர்த்து சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பெருமளவிலான மென்பான போத்தல்கள் மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரனின் ஆலோசனையின் பேரில் பொதுச் சுகாதார அதிகாரிகள் மேற்படி திடீர் தேர்தலை நடாத்தி குறித்த சட்டவிரோத மனித பாவனைக்குதவாத மென்பானங்களை கைப்பற்றியுள்ளனர்.
'பென்சாயிட் அசிட்' எனப்படும் ஒரு விதமான மனித பாவனைக்கு உதவாத திரவம் குறித்த மென்பான போத்தல்களில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் பொருத்தம் இல்லாத நிலக்கலவையும் இதில் இணைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரிகள் குறித்த மென்பான தயாரிப்பு நிறுவனம், விநியோகஸ்தர், விற்பனையாளர் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
60 ஆயிரம் அபராதம்
இதன்போது, விற்பனையாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆகியோருக்கு தலா 15,000 வீதமும் உற்பத்தியாளருக்கு 30 ஆயிரம் ரூபாயுமாக 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மென்பானத்தை கைப்பற்றப்பட்ட மென்பானங்களை அழிக்குமாறும் ஏனைய விற்பனை நிலையங்களில் இருக்கும் பானங்களை அகற்றுமாறும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 23 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
