யாழில் இளைஞரொருவர் கூரிய ஆயுதத்துடன் கைது
யாழ்.கோப்பாய் மற்றும் கொக்குவிலில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 26 வயதுடைய கொலின் என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி கோப்பாய் மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு வன்முறைக் கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றங்களில் பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள்
நிலுவையில் உள்ளதென்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முத்துவை அசிங்கப்படுத்திய சீதா, நீதுவால், ரவி-ஸ்ருதி இடையே வெடித்த பெரிய பிரச்சனை... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam