வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம்
வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தானாவால் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது வவுனியா - நாகர் இலுப்பைக்குளத்தில் நேற்று (09) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொழில் முனைவோருக்கான விவசாய உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான பொருட்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.







ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 15 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam
