கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
தீர்வை வரியின்றி மோசடியான முறையில் இலங்கைக்கு தங்கம் கொண்டு வர முயற்சித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கண்டியில் வசிக்கும் 30 வயதுடைய வர்த்தக பெண் ஒருவராவார்.
சந்தேகநபரிடம் இருந்து 599 கிராம் 404 மில்லிகிராம் எடையுள்ள 6 தங்க மோதிரங்களும் 200 கிராம் 44 மில்லிகிராம் எடையுள்ள தங்க சங்கிலியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this video
