ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இளம் கடத்தல்காரர்கள்- தமிழர் பகுதியில் தொடர் சோதனை
அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், நடத்தப்பட்ட சோதனையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று(04.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அம்பாகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயது முதல் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இளம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது
இந்த நடவடிக்கையின் போது, 2,800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 14,700 ரூபாய் ரொக்கப் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இங்ஹினியாகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபர்களை விசாரணையின் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.