கொழும்பு வைத்தியசாலையின் இளம் பெண் தாதி மர்ம மரணம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரின் திடீர் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குறித்த தாதி, தனது பயிற்சிக் காலத்தை முடித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றி வந்தார்.
இளம் பெண் மரணம்
கடந்த 25ஆம் திகதி பண்டாரவளை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து 26ஆம் திகதி உல்லாசப் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.

காலை உணவு பெற சென்ற போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், இந்த தாதி பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனவே மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகளுக்கு உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் காணப்படவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri