யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(25) இடம்பெற்றுள்ளது.
டச்சுவீதி, உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த நிருன் டர்சிகா (வயது 29) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு வயிற்றுக்குற்று காரணமாக கடந்த 19.05.2025 அன்று வயிற்றில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது அவருக்கு வயிற்றில் ஒரு குழாய் வைக்கப்பட்டது. அந்த குழாயினை அகற்றுவதற்காக கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், சத்திர சிகிச்சை நிறைவில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இரத்த கசிவு
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டனர்.
இரத்த நாளங்களுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டு, இரத்தப் போக்கினால் மரணம் ஏற்பட்டதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
