கொழும்பில் வீட்டுகுள் புகுந்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்
கொழும்பில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலத்த காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அங்கொட பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அயல் வீட்டு நபர் எனவும் உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து சந்தேக நபர் ஆயுதத்தால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடல் முல்லேரியா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan
