ஒரு வருட காலத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு
கடந்த ஒரு வருட காலத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் மூலம் குறித்த ஆயுதங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளினால் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட டீ-56 ரக துப்பாக்கிகள் 30ம் குறித்த சட்டவிரோத ஆயுதங்கள் எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் மீட்பு
அதற்கு மேலதிகமாக 64 கைத்துப்பாக்கிகள் கடந்த ஒரு வருட காலத்தினுள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த 46 ரிபீட்டர் ரக துப்பாக்கிகள் பொலிசாரின் சோதனைகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு மேலதிகமாக கட்டுத்துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
