கிளிநொச்சியில் சோகம் : பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்
கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் சுகிர்தன் 26 வயதுடைய இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது
ஆடை தொழிற்சாலை பணியினை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பொழுது பேருந்தில் இருந்து தவறி விழுந்த நிலையில் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இ்நநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



