யாழ்ப்பாணத்தில் திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்: பரிசோதனைகளில் வெளியான தகவல்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிமோனியா தொற்று
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 30ஆம் திகதி முதல் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த 3ஆம் திகதி இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (04) பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
இவர் நிமோனியா தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்ததாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
