வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : இளம் மனைவி தவிப்பு
கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் இலங்கைக்கு வந்த நிலையில் மீண்டும் அங்கு செல்ல தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கம்பளை போவல, பலதொர பிரதேசத்தில் வசிக்கும் இளம் வர்த்தகரான மகேஷ் சமரநாயக்க (30) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரம் வெட்டும் தொழில்
கடந்த மார்ச் மாதம் திருமணமான அவர் கொரியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
இலங்கையில் இயந்திரங்கள் மூலம் மரம் வெட்டும் தொழில் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இதன்போது மரம் ஒன்றை வெட்டும் போது அது அவர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தலையில் அடிபட்ட நிலையில் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
வைத்திய அதிகாரி
அவரும் அவரது மனைவியும் கொரிய பரீட்சையில் சித்தியடைந்து மீண்டும் கொரியா செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவித சம்பவத்தை எதிர்கொண்டனர்.
பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கம்பளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அமிலதா மரம் விழுந்ததில் தலை மற்றும் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
