முள்ளிப்பொத்தானையில் மாயமான இளைஞன் மூன்று நாட்களுக்குப் பின் மீட்பு (Photo)
முள்ளிப்பொத்தானையில் கரடி துரத்தி காட்டில் சென்ற இளைஞன் மூன்று நாளைக்கு பின் மீட்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை - தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஈச்சநகர் காட்டில் காணாமல் போன இளைஞனை இராணுவத்தினரும், பொலிஸார் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து இளைஞனை நேற்று மாலை மீட்டுள்ளார்கள்.

வழிதவறி சென்றதால் வந்த விபரீதம்
முள்ளிப்பொத்தானை - ஈச்சநகர் காட்டுப்பகுதியில் நண்பர்களுடன் சமைத்துச் சாப்பிடுவதற்காகப் போனவர்களைத் தேடி தனியாகச் சென்ற இளைஞன் கரடி துரத்தியதால் வழிதவறி காட்டில் சென்று இரண்டு இரவும் ஒரு பகலும் சாப்பாடு இல்லாமல் மரத்தில் இருந்ததாகவும் குறித்த நபர் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை (16) காணாமல் போயுள்ள நிலையில் மீட்கப்பட்டு கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தம்பலகாமம், யூனிட் 10, 806 இல் வசிக்கும் 23 வயதுடைய சனூன் மொகமட் ரிஸ்வான்
என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam