கனடா செல்ல முயன்ற தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்க பிரிவு அதிகாரிகளால் தமிழ் இளைஞனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் நேற்று இரவு 07.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-217 விமானத்தில் தோஹா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
போலி கடவுச்சீட்டு
போலியான கடவுச்சீட்டில் பயணம் செய்தமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரைக் கைது செய்த குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
