மரத்தில் இருந்து விழுந்த சிறுமி மரணம்
திருகோணமலை(Trincomalee) - கிண்ணியாவில் மரத்திலிருந்து விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளா்
இன்று(30) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயிலிடி பிரதேசத்தைச் சேர்ந்த, வான்எல புகாரி நகர் வித்யாலயத்தில் தரம் ஆறில் கல்வி கற்றுவரும் 12 வயதான ரிஷ்வான் பாத்திமா ரிப்கத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தச் சிறுமி, தனது வீட்டு முற்றத்தில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறித்துக் கொண்டு இருந்த போது, தவறி விழுந்து தலையில் காயம்பட்ட நிலையில் உயிரிழந்ததாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தற்போது சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |