வவுனியாவில் இளம் குடும்ப பெண்ணொருவர் எடுத்த விபரீத முடிவு
வவுனியாவில், இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
குறித்தப் பெண் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செட்டிகுளம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மேலதிக விசாரணை
தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட அந்த பெண்ணை, அயலவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam