யாழில் இளம் குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(30) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வட்டுக்கோட்டை - கலட்டி பகுதியைச் சேர்ந்த நடராசா ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் இன்று காலை உடல் சுகயீனம் காரணமாக படுத்திருந்தார்.

இந்நிலையில் அவர் அசைவற்று காணப்பட்டதால் குடும்பத்தினர் அவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்தார்.
மரண விசாரணை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தியதுடன் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri