யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு
யாழ்ப்பாணம்- ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு கடற்பரப்பில் பெருந்தொகையான கஞ்சாவுடனும் 04சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(29) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 150 கிலோக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யபட்டவர்கள் மற்றும் கஞ்சா என்பன நெடுந்தீவு பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை ஊர்காவற்றுறை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
