இனிய பாரதியின் சகா வழங்கிய முக்கிய தகவல்! தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் அகழ்வு பணிகள்

Tamils Pillayan Vinayagamoorthi Muralidaran
By Farook Sihan Aug 30, 2025 10:44 AM GMT
Report

கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றுமொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நேற்று(29) மதியம் முதல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் இரண்டாம் நாளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் தெசீபா ரஜீவன் முன்னிலையில் 3 ஜேசிபி இயந்திரம் மூலம் பல்வேறு அடையாளம் காணப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டு நிறைவடைந்தன.

இனிய பாரதியின் முக்கிய சகா

கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இனிய பாரதியின் சகா வழங்கிய முக்கிய தகவல்! தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் அகழ்வு பணிகள் | Thambiluvil Graveyard Excavation Day 2

அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தாடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி குற்றப்பலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

இதன் போது குறித்த அகழ்வு வியாழக்கிழமை (28) மாலை குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் முதலாம் நாள் அகழ்வு பணிகள் ஆரம்பமாகி இருந்தன.

உத்தரவு

எனினும் எதுவித சான்று பொருட்களும் அவ்விடத்தில் கிடைக்காமையினால் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் மறுநாள் அதாவது நேற்றையதினம்(29) ஆகழ்வு பணியை இரண்டாவது நாளில் முன்னெடுக்க உத்தரவு இட்டிருந்தார்.

இனிய பாரதியின் சகா வழங்கிய முக்கிய தகவல்! தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் அகழ்வு பணிகள் | Thambiluvil Graveyard Excavation Day 2

இதற்கமைய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் பொலிஸார் என பலரும் பிரசன்னமாயிருந்த நிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இரண்டாவது நாளிலும் எதுவித சான்று பொருட்களும் அங்கு கிடைக்கப்பெறவில்லை. இதனால் குறித்த அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு நீதிவானின் உத்தரவிற்கமைய நிறைவு செய்யப்பட்டது.

 அகழ்வு பணிகள்

ஏற்கனவே கடந்த மாதம் ஜுலை (31) அன்று தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த பொது மைதானத்தில் புதைத்திருப்பதாக அரச சாட்சியாக மாறி இருந்தார்.

இனிய பாரதியின் சகா வழங்கிய முக்கிய தகவல்! தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் அகழ்வு பணிகள் | Thambiluvil Graveyard Excavation Day 2

அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி றிஸ்வான் மேற்பார்வையில் கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஸ்கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரபப்ட்டிருந்தார்.

எனினும் குறித்த நபரது வாக்குமூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

பின்னர் மற்றுமொருவரின் வாக்குமூலத்திற்கமைய மற்றுமொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US