கோட்டாபயவை காப்பாற்றுவாரா நாமல்..! அடுத்தடுத்து காத்திருக்கும் அதிர்ச்சிகள்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்னிலையாகினார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணைக்கே அவர் முன்னிலையாகினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், பல முக்கிய உயர் பதவியில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக ராஜபக்சக்கள் தொடர்பில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதிலிருந்தும் தடுத்து வைப்பதிலிருந்தும் தடுக்கும்படி கோரி கோட்டாபய மனு தாக்கல் செய்திருந்தார்.
இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,