விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் மரணம்
கடந்த இருபதாம் திகதி விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (24) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கற்குவாரி, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் யுவான்கீர்த்தி (வயது 36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 20ஆம் திகதி சந்தையில் மரக்கறி வாங்கிக்கொண்டு மல்லாவியிலிருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார்.
இதன்போது வன்னிவேளாங் குளத்தடியில் எதிரே மிகவும் வேகமாக இருவருடன் வந்த மோட்டார் சைக்கிள் பேருந்தினை முந்த முற்பட்டபோது இவர் மீது மோதியது.
இதன்போது மூவரும் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அன்றையதினமே, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் உயிரிழந்தனர்.
அதன்பின்னர் குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
