வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) -முறிப்பு பகுதியில் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (4) இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
இதன்போது , 36 வயது மதிக்கத்தக்க முறிப்பு பகுதியில் வசிக்கும் மோகன் கோகுலன் எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் , மேற்குறித்த பகுதியில் ஒரு குழுவினர் இணைந்து குடும்பஸ்தர் ஒருவருடன் வாய்த்தர்க்கதில் நேற்றையதினம் (13) ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Cineulagam

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri
