கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் தம்பதியர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Police Hambantota Sri Lanka Police Investigation
By Rakesh Oct 09, 2025 07:02 AM GMT
Report

அம்பாந்தோட்டை, ஹூங்கம பகுதியில் வீடொன்றினுள் 28 வயதான இளம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதலும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடிகல ரன்ன பகுதியில், உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த குழுவினர் வீட்டில் இருந்த இளம் தம்பதியினரைக் கொடூரமான முறையில் படுகொலை செய்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் ஹூங்கம பொலிஸார் மற்றும் தங்காலை குற்ற விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உலக சந்தையில் தடுமாறும் தங்க விலை: வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

உலக சந்தையில் தடுமாறும் தங்க விலை: வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் தம்பதியர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Young Couple Brutally Murdered Court Orders

நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய குற்றச் செயலுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

35 வயதுடைய பெண் ஒருவரும், 27 தொடக்கம் 33 வயதுடைய 3 ஆண்களும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ரன்ன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்வாறு கைதான நபர்களிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் 12 ரக துப்பாக்கி, போர் 12 ரக 2 தோட்டாக்கள் மற்றும் ஒரு வெற்றுத் தோட்டாவும், 2 வெட்டுக் கத்திகளும் மீட்கப்பட்டன.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் தம்பதியர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Young Couple Brutally Murdered Court Orders

உயிரிழந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடும், கூரிய ஆயுதங்களால் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளமை பிரதேச பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் கஹந்தமோதர பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் நபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்கள் நேற்று அங்குனுகொலபெலஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய வாகனங்களை வாங்க தயங்கும் இலங்கையர்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

புதிய வாகனங்களை வாங்க தயங்கும் இலங்கையர்கள்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

பெருந்தொகையான கட்டணத்தை செலுத்தாமல் அநுர அரசை ஏமாற்றிய மகிந்த குடும்பம்

பெருந்தொகையான கட்டணத்தை செலுத்தாமல் அநுர அரசை ஏமாற்றிய மகிந்த குடும்பம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US